மீண்டும் களம் இறங்கும் MicroMax ! நவம்பர் 3 இல் இரண்டு புதிய Mobiles அறிமுகம்

MICROMAX IN 1 AND 1A MOBILES EXPECTED PRICE & SPECS IN TAMIL

MicroMax என்பது இந்தியாவின் ஒரு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் சார்பில் தற்போது MicroMax இன் கீழே IN (India) எனும் பெயரில் புதிய இரண்டு Smartphone களை நவம்பர் 3 இல் மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதன்படி அறிமுகமாக் கூடிய இரண்டு Smartphone களின் பெயர்கள் IN 1 மற்றும் IN 1A ஆகியவையாகும். இது சீன மொபைல்களுக்கு போட்டியாக இந்தியாவின் தயாரிப்பில் அறிமுகமாகிறது என்பதை MicroMax நிறுவனம் தெரிவித்துள்ளது.

Micromax in 1 and in 1A Mobiles
Micromax IN Series

இந்த MicroMax Mobiles இன் Specifications மற்றும் Price பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது குறித்த ஒரு சில தகவல்கள் நம்ப தகுந்த இணையத்தளங்கள் மூலம் நமக்கு கிடைத்துள்ளன. 

அதன்படி இதன் விலை ரூ.7000 முதல் ரூ.25000 வரைக்குள் இருக்கலாம் என தெரிகிறது. MicroMax இல் வரவிருக்கும் இந்த இரண்டு மொபைல்களில் எந்த வித Bloatware மற்றும் விளம்பரங்கள் இருக்காது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

MediaTek Helio Chipset Image
MediaTek Chipset

MicroMax IN 1 மொபைலில் MediaTek இன் Helio G35 Processor மற்றும் IN 1A மொபைலில் Helio G85 Processor கொடுக்கப்பட்டுள்ளன. 

இரண்டு Mobile களிலும் 6.5 இன்ச் HD+ LCD Display இருக்கும் என்றும் Battery ஆனது 5000 Mah கொண்ட பேட்டரி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Camera என்று பார்க்கும் போது In 1 மொபைலில் பின்புறம் 13MP + 2MP என்று Dual Camera மற்றும் முன்புறத்தில் 8MP Selfie கேமராவும் உள்ளது. In 1A மொபைலில் பின்புறம் 13MP + 5MP + 2MP என்று Triple Camera மற்றும் முன்புறம் 13MP Selfie கேமராவும் உள்ளதாக கூறப்படுகிறது.

MicroMax IN 1 மொபைலில் அதிகபட்சமாக 3GB RAM மற்றும் IN 1A மொபைலில் 4GB Ram கொடுக்கலாம் என்றும், OS என்று பார்க்கும் போது Android 10 வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Micromax in Mobiles #inMobiles
#INMobiles


Post a Comment

0 Comments