Check Aadhar Card Update Status Online


ஆதார் என்பது இந்தியாவின் முக்கியமான அடையாள சான்றுகளில் ஒன்றாகும்.அப்படிப்பட்ட ஆதார் அட்டைக்கு நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று புதியதாக விண்ணப்பித்து இருந்தாலோ அல்லது ஏற்கனவே நீங்கள் வைத்திருக்கும் ஆதார் அட்டையில் பிழைகள் இருக்கும் பட்சத்தில் (எடுத்துக்காட்டாக பெயர், புகைப்படம், முகவரி) அதனை திருத்தம் செய்திருந்தாலோ அதன் தற்போதைய நிலை என்ன என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பது பற்றிதான் இங்கு பார்க்கப் போகிறோம்.


அதாவது உங்கள் ஆதார் அட்டைக்கான விண்ணப்பம் சென்றுவிட்டதா? செயலில் உள்ளதா? ஆதார் தயாரிக்கப்பட்டுவிட்டதா? என்பதை நாம் மொபைல் அல்லது கணினி மூலம் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Aadhar Official Website India

அதற்கு நாம் முதலில் ஆதார் இன் அதிகாரப்பூர்வமான இணையத்தளமான uidai.gov.in ற்கு செல்ல வேண்டும்.


அதன் பிறகு வரக் கூடிய பக்கத்தில் Get Aadhar & Update Aadhar என்று இரண்டு பிரிவுகள் இருக்கும்.அதில் முதல் பிரிவில் உள்ள Check Aadhar Status என்பதை கொடுக்கலாம் அல்லது இரண்டாம் பிரிவில் உள்ள Check Aadhar Update Status என்பதை கொடுக்கலாம்.இதில் நீங்கள் எதனை கொடுத்தாலூம் ஒரே பக்கத்திற்கு தான் செல்வீர்கள்.


அடுத்து வரக்கூடிய பக்கத்தில் Enrollment Id கேட்கப்பட்டிருக்கும்.இதனை நீங்கள் ஆதார் விண்ணப்பம் அல்லது திருத்தம் மேற்கொண்ட போது ஆதார் மையத்தில் உங்களுக்கு அதற்கான ஒரு ஒப்புகை சீட்டு கொடுப்பார்கள்.அதில் உங்களுக்கு தேவையான 14 இலக்க Enrollment Idக்கான எண்கள் இருக்கும்.அதனை Enrollment Id யில் உள்ளிடவும்.

அதன் பிறகு Captcha Verification செய்துவிட்டு கீழே உள்ள Check Status என்பதை கொடுக்கவும்.


இப்போது உங்கள் ஆதார் அட்டையின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.அதில் In Process என்று இருந்தால் ஆதார் இன்னும் அச்சிடப்பட்டவில்லை என்று அர்த்தம்.ஒரு வேளை Your Aadhar is Generated என்று இருந்தால் உங்கள் ஆதார் அச்சிடப்பட்டு உங்களுக்கு அனுப்பப்பட்டது என்று அர்த்தம்.

இது போல் வரும் பட்சத்தில் Download Aadhar என்பதை கொடுத்து உங்கள் ஆதார் கார்டு எப்படி இருக்குமோ அதே போல் உங்கள் மொபைல் அல்லது கணினியில் e Aadhar Card ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

Post a Comment

0 Comments